’வெற்றிநடை போடும் தமிழகம் ’ விளம்பரத்திற்கு செலவு எவ்வளவு தெரியுமா?

 

’வெற்றிநடை போடும் தமிழகம் ’ விளம்பரத்திற்கு செலவு எவ்வளவு தெரியுமா?

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக – திமுக இரண்டும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல் ஜல்லிக்கட்டு நாயகர் ஓபிஎஸ் என்ற வீடியோவும் ஒளிபரப்பாகி வருகிறது. திமுகவும் ஸ்டாலின் தான் வராறு விடியல் தர போராறு என விளம்பரங்களை அள்ளி வீசி வருகிறது. மக்களைக் கவர வேண்டி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளையும் அறிவித்த வண்ணம் உள்ளன.

’வெற்றிநடை போடும் தமிழகம் ’ விளம்பரத்திற்கு செலவு எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் பிரபல முன்னணித் தொலைக்காட்சிகள், வானொலி, செய்தி சேனல்கள், எஃப்.எம்கள், செய்தித்தாள்கள் என திரும்பும் இடமெல்லாம் மக்களின் காதுகளுக்கு கேட்பது போன்று அதிமுக ’வெற்றி நடைபோடும் தமிழகமே’ என்ற பாடலுடன் தொடர்ந்து விளம்பரம் செய்துவருகின்றனர். இதனை கேட்ட திமுகவினர் தமிழகம் வெற்றிநடை போடவில்லை, தமிழக அமைச்சர்கள்தான் வெற்றிநடைப்போட்டுக்கொண்டிருக்கின்றனர் என விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மக்கள் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய பணம் விளம்பரத்திற்காக செலவழிக்கப்படுவதாக திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதற்கு அரசு வழக்கறிஞர், ஆயிரம் கோடி விளப்பரத்திற்காக செலவிடவில்லை மாறாக 64 கோடியே 72 லட்சம் ரூபாய்தான் செலவிடப்பட்டுள்ளது என என்று வாதாடினார். மேலும் விளம்பரங்கள் கொடுப்பது கடந்த 18 ஆம் தேதியுடன் நின்றுவிட்டதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கை உயர்நீதிமன்றம் மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.