சீர்காழி கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த ஏடிஎஸ்பி திடீர் மரணம்…

 

சீர்காழி கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த ஏடிஎஸ்பி திடீர் மரணம்…

மயிலாடுதுறை

சீர்காழியில் கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை அதிரடியாக கைதுசெய்த மயிலாடுதுறை ஏடிஎஸ்பி முருகேசன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 27ஆம் தேதி, வடமாநில கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை கழுத்தறுத்து கொலைசெய்து விட்டு, வீட்டில் உள்ள 12 கிலோ தங்கம் மற்றும் 6.75 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். தொடர்ந்து, சீர்காழி அருகே சவுக்கு தோப்பிற்குள் மறைந்திருந்த 3 கொள்ளையர்களையும் மயிலாடுதுறை ஏடிஎஸ்பி முருகேசன் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாக கைதுசெய்தனர்.

சீர்காழி கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த ஏடிஎஸ்பி திடீர் மரணம்…

அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங்(28) என்பவர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த மயிலாடுதுறை ஏடிஎஸ்பி முருகேசன், இன்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

சீர்காழி கொள்ளை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்த ஏடிஎஸ்பி முருகேசனின் திடீர் மரணம் காவல்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.