“ஆடாம ஜெயிச்சாச்சி… அந்த 20 தொகுதி திமுகவுக்கு தான்”

 

“ஆடாம ஜெயிச்சாச்சி… அந்த 20 தொகுதி திமுகவுக்கு தான்”

நீண்ட இழுபறிக்குப் பின் நேற்று இரவோடு இரவாக பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்குவதாக அதிமுக அறிவித்தது. அதேபோல திமுகவில் நேற்று இந்திய கம்யுனிஸ்ட் கட்சியுடனான ஒப்பந்ததை முடித்துவிட்டது. ஆறு தொகுதிகள் என ஒப்பந்தமானது. இதே எண்ணிக்கையில் நேற்று முன்தினம் விசிகவோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சமூகநீதி பேசும் திமுக விசிகவுக்கு ஆறு தொகுதிகள் தான் வழங்கியிருக்கிறது என திடீர் பாசத்தால் கமல்ஹாசன் கொதித்தெழுந்தார்.

“ஆடாம ஜெயிச்சாச்சி… அந்த 20 தொகுதி திமுகவுக்கு தான்”

இச்சூழலில் இன்று சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்னும் சில தினங்களில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்ற பட்டியலை வெளியிடுவோம். ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது விசிகவுக்கான பின்னடைவு என்றோ, அல்லது திமுக விசிகவைச் சிறுமைப்படுத்திவிட்டார்கள் என்றோ வருத்தப்படவில்லை.

“ஆடாம ஜெயிச்சாச்சி… அந்த 20 தொகுதி திமுகவுக்கு தான்”

கூடுதலாக தொகுதிகள் கிடைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனாலும் இது வெறும் 6 தொகுதிகள் அல்ல. 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பாஜக போட்டியிடுகின்ற தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. எடுத்த எடுப்பிலேயே 20 தொகுதிகளை திமுக கூட்டணிக்கு அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது” என்றார்.