அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 

அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பே நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டனர். அமைச்சர்களாக இருக்கும் இரண்டு விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், க. பாண்டியராஜன், வேலுமணி ஆகியோருக்கு அதே தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன

அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இருந்த லால்குடி தமாகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தஞ்சாவூரை அதிமுக எடுத்துக்கொள்கிறது. மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) – இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சாவூர் – அறிவுடைநம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.