• December
    15
    Sunday

Main Area

Main



அல்வா கொடுத்துத் தான் அதிமுக இடைதேர்தலில் ஜெயிச்சுதா?: மு.க ஸ்டாலின் கேள்வி..!

MK Stalin
MK Stalin

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் ஆயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று அதிமுக வேட்பாளர்கள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியின் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி குறித்து சென்னையில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இடைத்தேர்தலில் நடந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக தோற்றாலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தான் நிச்சயமாக வெற்றி பெரும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறினார். 

MK Stalin

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்று விட்டது என்று அதிமுக கட்சியினர் விமர்சனம் செய்தனர். இப்போது நடந்த தேர்தலில் அதிமுக என்ன மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என்று மு.க ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், ஒரு ஆட்சி நடக்கும் பொது அதில் நாடக்கும் தவறுகளை எடுத்துச் சொல்வது தான் எதிர்க்கட்சியின் கடமை, ஆனால் நான் அதைச் செய்தால் எடப்பாடிக்கு கோவம் வருகிறது என்று மு.க ஸ்டாலின் கூறினார்.      

2018 TopTamilNews. All rights reserved.