”ஆட்சியை இழந்தும் அதிமுக திருந்தல”… திமுக பக்கம் சென்ற முதல் விக்கெட்!!

 

”ஆட்சியை இழந்தும் அதிமுக திருந்தல”… திமுக பக்கம் சென்ற முதல் விக்கெட்!!

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது இதனால் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது. அதிமுகவில் இருந்த 27 அமைச்சர்களில் 11 பேர் தோல்வி அடைந்துள்ள நிலையில் 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

”ஆட்சியை இழந்தும் அதிமுக திருந்தல”… திமுக பக்கம் சென்ற முதல் விக்கெட்!!

இந்நிலையில் கோவையை சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு,திமுகவில் இணைந்தார். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவர், தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

இதுகுறித்து விஷ்ணுபிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக எந்த நோக்கத்தோடு துவங்கப்பட்டதோ அது மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திசைமாறி இன்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. மேலும் இளைஞர்களுக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை. மக்கள் பணி ஆற்றுவதற்கும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்விக்கு பிறகும் இவர்கள் தங்களது தவறுகளை சரி செய்வதாகவும் தெரியவில்லை. ஆகவே மாண்புமிகு அம்மா அவர்கள், 2010இல் யாருடைய சிபாரிசுமின்றி நேரடியாக எனக்கு வழங்கிய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பதவியை நான் கனத்த இதயத்தோடு ராஜினாமா செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.