‘முன்பு பெரியார் பின்பு எம்.ஜி.ஆர். இப்போது அண்ணா.. சாயத்தால் சரித்திரத்தை வீழ்த்த முடியுமா”: வைகை செல்வன் ட்வீட்

‘முன்பு பெரியார் பின்பு எம்.ஜி.ஆர். இப்போது அண்ணா.. சாயத்தால் சரித்திரத்தை வீழ்த்த முடியுமா”: வைகை செல்வன் ட்வீட்

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். இதேபோல் ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதுபோன்று தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது கவித்துண்டு அணிவித்த சம்பவமும் நடந்தது.

‘முன்பு பெரியார் பின்பு எம்.ஜி.ஆர். இப்போது அண்ணா.. சாயத்தால் சரித்திரத்தை வீழ்த்த முடியுமா”: வைகை செல்வன் ட்வீட்

இவ்வாறு மறைந்த தலைவர்களை அவமதிப்பு செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இருக்கும் அண்ணா சிலை மீது பழைய பல்பு, மாலை, காவிக் கொடி அணிவித்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அண்ணா சிலை மீதான அவமதிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் இச்சம்பவம் தொடர்பாக தன் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “காவிச் சாயமும்…காவித் துண்டும்…போர்த்தப் படுகிறது முன்பு பெரியார் பின்பு எம்.ஜி.ஆர். இப்போது அண்ணா சாயத்தால் சரித்திரத்தை வீழ்த்த முடியுமா…?” என்று குறிப்பிட்டுள்ளார்.