அமமுக கலையப் போகிறதா? அரசியலில் பரபரப்பு

 

அமமுக கலையப் போகிறதா? அரசியலில் பரபரப்பு

தமிழக அரசியலில் வருகிற ஜனவரி மாதத்திற்குள்ளாக மிகப்பெரிய ‘பட்டாசு’ ஒன்று வெடிக்கக் காத்திருக்கிறது. இதற்காக திரை மறைவில் ‘தீ’ பற்ற வைக்கும் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.கட்சியின் துணைபொதுச்செயலாளரும், கட்சியை வழி நடத்துபவருமான டிடிவி தினகரன் இதுபற்றிய எந்த தகவலும் தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அமமுக கலையப் போகிறதா? அரசியலில் பரபரப்பு

தேர்தல் காலம் மிக அருகில் நெருங்கி விட்டதால் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை உளவுத்துறையின் ரிப்போர்ட் இதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில் அமமுக பற்றிய முக்கிய தகவல் ஒன்று தரப்பட்டுள்ளது. அதில் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சாதியினர் அதிக அளவில் அமமுகவை ஆதரிப்பதாகவும், இவர்களால் தென் மாவட்டங்களில் ஓட்டுக்கள் பெருமளவு பிரிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அதிமுக மேலிடம் ஒரு புதிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளது. தென் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த முக்குலத்தோர் சாதியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு வலை விரிக்கப்பட்டிருக்கிறது.

அமமுக கலையப் போகிறதா? அரசியலில் பரபரப்பு

அதுதவிர அமமுகவினருக்கும் ரகசிய அழைப்பு விடப்படும் திட்டம் தயாரிப்பில் இருக்கிறது. கடந்த 4 மாதமாக டிடிவி தினகரன் தீவிர அரசியல் செய்யாத நிலையில் அமமுக தொண்டர்களும் தொய்வடைந்த நிலையில் உள்ளனர்.அமமுகவின் பல முக்கிய நிர்வாகிகளே கூட அதிமுகவில் மீண்டும் சேரப்போவதாகச் சொல்கிறார்கள்.அமமுகவினரை மீண்டும் அதிமுகவில் இணைய வைப்பதன் மூலம் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவால் விடுக்கப்படும் சவால்களை மிக எளிதாக சமாளிக்கலாம் என்பது அதிமுகவின் கணக்காகும். சசிகாலாவின் விடுதலைக்கு முன்னரே இந்தப் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.