தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக!

 

தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக!

தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக – அதிமுக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து அரசியல் களம் அனல் பறக்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தன்னுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாமகவுக்கு 23 சீட்டுகள் வழங்கியிருக்கிறது. அதை விட அதிகமான தொகுதிகள் தான் வேண்டுமென பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன.

தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக!

முதலில் 40 சீட்டுகள் வேண்டுமென கேட்ட தேமுதிக தற்போது 25 தொகுதிகளுக்கு இறங்கி வந்திருக்கிறது. ஆனால், தேமுதிகவின் பலம் தற்போது குறைந்திருப்பதால் 12 தொகுதிகள் மட்டுமே கொடுக்க அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதிருப்தி கட்சியான தேமுதிக, அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை நேற்று புறக்கணித்தது.

தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக!

இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை இன்று மாலை தேமுதிக அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. அமைச்சர் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்டோருடன் தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இதன் முடிவில், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா? இல்லையா? என்பது தெரிய வந்து விடும்.