கட்சியை பலப்படுத்தும் அதிமுக! நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமனம்

கட்சியை பலப்படுத்தும் அதிமுக! நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமனம்

நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட இந்த மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும் அதிமுக நியமித்துள்ளது. அதிமுகவில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி புதிதாக அமைக்கப்பட்ட 29 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியை பலப்படுத்தும் அதிமுக! நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமனம்

  • அதன்படி காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளராக திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை புறநகர் மாவட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.பி. கந்தன் என்பவரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக சிறுணியம் பி. பலராமன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியை பலப்படுத்தும் அதிமுக! நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமனம்

  • திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் பென்ஜமின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தியும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • வேலூர் மாநகர் மாவட்டத்திற்கு எஸ்.ஆர்.கே அப்புவும், வேலூர் புறநகர் மாவட்டத்திற்கு த. வேலழகன் என்பவரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக கே.சி. வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக ரவி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர் சிவி சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சிக்கு குமரகுருவும், கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், கோவை மாநகர் மாவட்டத்திற்கு அம்மன் கே. அர்ச்சுணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு அருண்குமார் என்பவரும், நீலகிரி மாவட்டத்திற்கு கப்பச்சி டி. வினோத் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்

கட்சியை பலப்படுத்தும் அதிமுக! நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமனம்

  • திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் என்பவரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோஜி என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • நாகை மாவட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ் மணியனும், மயிலாடுதுறைக்கு வி.ஜி.கே செந்தில்நாதனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியை பலப்படுத்தும் அதிமுக! நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமனம்

  • திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு கணேச ராஜாவும் மாவட்ட செயலாளர்களாக நியமிகப்பட்டுள்ளனர்.
  • இதேபோல் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு கிருஷ்ணமுரளியும், தெற்கு மாவட்டத்திற்கு செல்வமோகன் தாஸ் பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.