கட்சியை வழிநடத்த போவது யார்? எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டிய அதிமுக

 

கட்சியை வழிநடத்த போவது யார்? எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டிய அதிமுக

சட்டப்பேரவைத் தேர்தலில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சேலத்தில் இருந்த படியே ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தார். அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஏற்றுக்கொண்டு, 15வது சட்டப்பேரவையை கலைத்து உத்தரவு பிறப்பித்தார்.

கட்சியை வழிநடத்த போவது யார்? எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டிய அதிமுக

இந்நிலையில் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்துமுடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், தலைமை கழகத்தில் வரும் 7.5.2021 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.