ஒன்றரை மணி நேரமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பாஜகவினர் பேச்சுவார்த்தை

 

ஒன்றரை மணி நேரமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பாஜகவினர் பேச்சுவார்த்தை

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.

இன்றைய அரசியல் செய்திகளில் ஹாட் டாப்பிக்காக மாறியிருப்பது அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதே. அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். அதிமுகவை கடுமையாக விமர்சித்து ஆர்ப்பரிக்கிறார்கள். கொண்டாட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தேமுதிகவினர் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறார்கள். 25 சீட்டு வரை கேட்ட தேமுதிகவுக்கு 13 சீட்டை தாண்டி கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தேமுதிக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

ஒன்றரை மணி நேரமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பாஜகவினர் பேச்சுவார்த்தை

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் அதிமுக- பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஒன்றரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக
வெளியேறிய நிலையில், பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உடன் கிஷன் ரெட்டி, சிடி ரவி எல் முருகன் சுமார் ஒன்றரை மணி நேரமாக ஆலோசனை பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது பற்றி இருதரப்பும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.