‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!

‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் மாபெரும் கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.

‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் 171 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள அதிமுக தலைமை, 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாமக, பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஓபிஎஸ் – ஈபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.

‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!

திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய 20 இடங்களிலும் பாஜக போட்டியிட உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!

மேலும் செஞ்சி, மைலம், ஜெயம்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொண்ணாகரம், தர்மபுரி, விருதாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பெண்ணாத்தூர், மேட்டூர், சேலம், சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், ஆத்தூர் ஆகிய 23 இடங்களிலும் பாமக போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!
‘பாமக, பாஜக’ போட்டியிடும் தொகுதிகள் இவை தான்.. பட்டியலை வெளியிட்டது அதிமுக!