எம்பி பதவியை ராஜினாமா செய்தனர் கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும்!

 

எம்பி பதவியை ராஜினாமா செய்தனர் கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும்!

முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கத்துக்கும் கேபி முனுசாமிக்கும் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தது. வைத்திலிங்கமாவது ஒரத்தநாடு தொகுதியில் 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். ஆனால் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட கேபி முனுசாமி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

எம்பி பதவியை ராஜினாமா செய்தனர் கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும்!

இதையடுத்து இருவரும் 2020ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இருவரும் வெற்றிபெற்று ராஜ்யசபா எம்பியானார்கள் இச்சூழலில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இது பெரும் பரபரப்புக்குள்ளானது. ஒருவேளை வெற்றிபெற்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்களா அல்லது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்களா என்ற ஐயம் எழுந்தது.

எம்பி பதவியை ராஜினாமா செய்தனர் கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும்!

வாக்கு எண்ணிக்கையில் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கமும் வேப்பனஹள்ளியில் முனுசாமியும் எம்எல்ஏவாக வெற்றிபெற்றனர். இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து எம்பி பதவியில் தொடர்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இச்சூழலில் இருவருமே எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். சற்று முன் தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்தனர். அது முடிந்தவுடன் தற்போது இந்த முடிவை இருவரும் எடுத்திருக்கிறார்கள்.