எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தீவிரம்

 

எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தீவிரம்

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியதால் குறைவான தொகுதிகளை பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்திருந்தார். அதன்படி, பாமக திருத்தணி, வேளச்சேரி, திருப்போரூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி ,ஆரணி , பென்னாகரம், வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், அணைக்கட்டு, ஓசூர், கலசபாக்கம், கும்மிடிபூண்டி, சங்கராபுரம் ,நெய்வேலி, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், திண்டிவனம், பண்ருட்டி ,மேட்டூர், ஜெயங்கொண்டம், ஆற்காடு உள்ளிட்ட 23 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு கொண்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தீவிரம்

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுகவுடன், பாமக ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் எந்தெந்த தொகுதிகளில் பாமக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாமக சார்பாக ஜி.கே மணி, ஏகே.மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.