பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது!

 

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது!

அதிமுக பாமக இடையே தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டி முடிவுக்கும் வந்துவிட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஒரு மாத காலமே அவகாசம் இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. அதிமுகவிலிருந்து பாமக கூட்டணி நழுவாமல் இருக்க வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது!

இது பாமகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? ஒதுக்கப்படும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள லீலா பேலஸ் ஓட்டலில் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது!

அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கிற்றனர். பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.