அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் தாயே… சசிகலாவை அழைக்கும் தொண்டர்கள்!

 

அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் தாயே… சசிகலாவை அழைக்கும் தொண்டர்கள்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை ராணுவக் கட்டுபாட்டில் வைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவுக்குள் அரங்கேறிய கூத்து அனைவரும் அறிந்தவையே. முதல்வராக்கப்பட்ட ஒபிஎஸ்சை ராஜினாமா செய்ய வைத்து, அரியணை ஏற பிளான் போட்டார் சசிகலா. ஆனால், கடைசி நேரத்தில் அவர் சிறை செல்ல நேர்ந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பிடித்தார்.

அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் தாயே… சசிகலாவை அழைக்கும் தொண்டர்கள்!

பின்னர், அரியணையில் அமரவைத்த சசிகலாவுக்கே ஆப்பு அடித்து விட்டார் எடப்பாடி. சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவரையே அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார். இதனிடையே, முதல்வர் பதவியை இழந்த ஒபிஎஸ் தர்ம யுத்தம் எல்லாம் நடத்தி களைத்து போய் வேறு வழியில்லாமல் எடப்பாடியுடன் சேர்ந்து கொண்டார். கட்சி இரட்டைத் தலைமையானது. கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் இருவரும் சேர்ந்தே எடுத்து வந்தார்கள். வெளியே இரட்டை சகோதரர்கள் போல காட்டிக் கொண்டாலும், உள்ளே இருவருக்கும் சண்டை மூண்ட வண்ணமே இருந்தது. முதல்வர் வேட்பாளர் பிரச்னையின் போது அது அப்பட்டமாக வெளிப்பட்டது.

அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் தாயே… சசிகலாவை அழைக்கும் தொண்டர்கள்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கோட்டைவிட்ட அதிமுகவில் எழுந்த அடுத்த பிரச்னை எதிர்கட்சித் தலைவர் யார்? என்பது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் வாய்ப்பை விட்டுக் கொடுத்த ஓபிஎஸ், இந்த முறை எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. எடப்பாடியும் விடாப்பிடியாக இருந்தார். இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது.

அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் தாயே… சசிகலாவை அழைக்கும் தொண்டர்கள்!

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுள் பலர் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்ததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தட்டிப் பறித்தார் எடப்பாடி. இது ஓபிஎஸ்ஸை அதிருப்தி அடையச் செய்தது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கட்சி இரு துருவமாக இருப்பதையும் இரட்டைத் தலைமையால் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் தாயே… சசிகலாவை அழைக்கும் தொண்டர்கள்!

இத்தகைய சூழலில், அதிமுகவுக்கு தலைமையேற்க வருமாறு சசிகலாவுக்கு விருதுநகரை சேர்ந்த தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவியே… ராணுவக் கட்டுப்பாடு போன்று இருந்த இக்கழகத்தின் இன்றைய நிலைமையை பாருங்கள் தாயே… போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்த் தளபதி மௌனம் காப்பது ஏனோ… காவல் தெய்வமே வாருங்கள் ” என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியலில் இருந்து விலகி மௌனம் காத்துக் கொண்டிருக்கும் சசிகலாவை அழைத்து ஓட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.