அதிமுக – பாஜக இடையே கூட்டணியே இல்லை! அதிமுக எம்.பி. பகீர் பேட்டி

 

அதிமுக – பாஜக இடையே கூட்டணியே இல்லை! அதிமுக எம்.பி. பகீர் பேட்டி

அதிமுக – பாஜக கூட்டணிக்கு தலைமை யார் என்ற கட்டத்தை தாண்டி, இரு கட்சிகளுக்கு இடையில் கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் கூட்டணி சலசலப்புகளும் ஆரம்பித்துள்ளன.


விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கூட்டணி வேறு, கொள்கை வேறு, கூட்டணியை விட்டு கொடுக்கலாம். ஆனால் கொள்கையை விட்டு கொடுக்க முடியாது என பாஜகவை மறைமுக விமர்சித்திருந்தார். மேலும் கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.

அதிமுக – பாஜக இடையே கூட்டணியே இல்லை! அதிமுக எம்.பி. பகீர் பேட்டி

இதேபோல் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “புனித ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு, எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்” என்று நக்கலாக பதிலளித்தார்.

இதையெல்லாம் புறந்தள்ளும் விதமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்கவில்லை. மாநில அரசில் பாஜக அங்கம் வகிக்கவில்லை” என தெரிவித்தார்.

ஆனால் மதுரையில் செய்தியாளர்களிடம் எல். முருகன், “அதிமுக – பாஜகவு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது. இதே கூட்டணி தொடரும்” என தெரிவித்துள்ளார்.