கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

 

கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, 79 தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 79 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சியை கோட்டைவிட்டது. பெரும்பாலான தமிழர்கள் எதிர்க்கும் பாஜகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்ததால் தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரட்டைத் தலைமையானதை அனைவரும் அறிவோம். ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் 4 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்றது. இருப்பினும், தேர்தலுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளராக யார் போட்டியிடுவது என்ற மோதல் வெடித்தது. நான் தான் முதல்வர் பதவியில் போட்டியிடுவேன் என ஓபிஎஸ்சிடம் வாக்குவாதம் செய்து முதல்வர் வேட்பாளராக களம் கண்டார் ஈபிஎஸ்.

கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

தேர்தலில் அதிமுக தோற்றுவிட்டதால், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அமரப்போவது யார்? என்ற அடுத்த சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. இது குறித்து விவாதிக்க, தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர் ஓபிஎஸ் – ஈபிஎஸ். 66 எம்எல்ஏக்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ‘கட்சிக்கு ஒரே தலைமை’ வேண்டுமென ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிமுகவை கைப்பற்ற ஒரு கூட்டம் காத்துக் கிடக்கும் சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்களுக்குள் அடுத்தடுத்து மோதல் வெடிப்பது ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸை அதிருப்தி அடையச் செய்துள்ளது.