கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு – பாமக விலகல் குறித்து செல்லூர் ராஜூ கருத்து!!

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு –  பாமக விலகல் குறித்து செல்லூர் ராஜூ கருத்து!!

கூட்டணியில் இருந்து பாமக விலகல் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு –  பாமக விலகல் குறித்து செல்லூர் ராஜூ கருத்து!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியுள்ளது. கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டி என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை; நம்மால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன, அவர்களால் நமக்கு எந்த பலனும் இல்லை.சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு –  பாமக விலகல் குறித்து செல்லூர் ராஜூ கருத்து!!

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலதான்; தேவை என்றால் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை . கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில்தான் எடுபடும்; பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.