திமுகவுக்கு போட்டியாக அதிமுக அறிவித்த எம்எல்ஏக்கள் கூட்டம்

 

திமுகவுக்கு போட்டியாக அதிமுக அறிவித்த எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு போட்டியாக அதிமுக அறிவித்த எம்எல்ஏக்கள் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனிடையே அன்றைய தினம் மாலை 05.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

திமுகவுக்கு போட்டியாக அதிமுக அறிவித்த எம்எல்ஏக்கள் கூட்டம்

இந்நிலையில் அதற்கு போட்டியாக அதிமுகவும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அகியோர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.