கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு கொரோனா!

 

கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு  கொரோனா!

கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த பாடில்லை. மாறாக உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது.

கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு  கொரோனா!

இந்நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு  கொரோனா!

முன்னதாக ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் சென்னை மியாட் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.