எடப்பாடியார் தான் மீண்டும் முதல்வர்.. அடித்துச் சொன்ன அமைச்சர்!

 

எடப்பாடியார் தான் மீண்டும் முதல்வர்.. அடித்துச் சொன்ன அமைச்சர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான விஜய பாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் கற்பக விநாயகர் ஆலயத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதா 2ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்று 6 மாதங்களில் உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவின் நிலை என்னவாகும் என பலரும் கேள்வி எழுப்பினர். அவரது மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அனைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அவர் தான் 3ஆவது முறையும் முதல்வராக பதவியேற்பார். தமிழகத்தில் மீண்டும் அவரது ஆட்சி தான் அமையும் என்று அதிரடியாக கூறினார்.

எடப்பாடியார் தான் மீண்டும் முதல்வர்.. அடித்துச் சொன்ன அமைச்சர்!

தொடர்ந்து பேசிய அவர், கொடுத்த எல்லா வாக்குறுதிகளை எல்லாத்தையும் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி விட்டார். இனி மக்களுக்கு செய்ய எந்த திட்டமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் மீண்டும் தலைதூக்கும். கரூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும் செந்தில் பாலாஜி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என சவால் விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் மீது 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் 34 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.