ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடக்கவிருந்த கூட்டம் திடீர் ரத்து!

 

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடக்கவிருந்த கூட்டம் திடீர் ரத்து!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எழுந்த பல சர்ச்சைகளின் காரணமாக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. அதிமுக பொதுச் செயலாளராக இருந்து சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரை கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஈபிஎஸ் நீக்கினர். தற்போது பொதுச்செயலாளர் இல்லாமலேயே ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்சும் செயல்பட்டு வருகிறார்கள்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடக்கவிருந்த கூட்டம் திடீர் ரத்து!

இத்தகைய சூழலில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக தேர்தல் டிசம்பர்மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதன் படி, அதிமுகவில் விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அது குறித்து ஆலோசிக்க இன்று காலை 11 மணிக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.