காலையில் பொதுக்குழு மாலையில் ரகசிய குழு! அதிமுகவின் அதிரடி

 

காலையில் பொதுக்குழு மாலையில் ரகசிய குழு! அதிமுகவின் அதிரடி

சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து இன்று மாலையும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் பொதுக்குழு மாலையில் ரகசிய குழு! அதிமுகவின் அதிரடி

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதியும், டிசம்பர் மாதம் 14ஆம் தேதியும் ஆலோசனை நடைபெற்ற நிலையில் மூன்றாவது முறையாக, தேர்தல் குறித்த ஆலோசனையில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டனர். கடந்த இரண்டு முறைய விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஒவ்வொரு மண்டல பொறுப்பாளர்களிடமும் தேர்தலுக்கான பணிகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி, “மக்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் 2021ல் அதிமுக ஆட்சி அமைக்கும். தொண்டர்களின் விருப்பத்தினால் தான் பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. 100 சதவீதம் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்” எனக் கூறினார்.