மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு விரையும் அதிமுக நிர்வாகிகள்!

 

மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு விரையும் அதிமுக நிர்வாகிகள்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு விரையும் அதிமுக நிர்வாகிகள்!

மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 18ஆம் தேதி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரான மதுசூதனன் உடல்நிலை பற்றிய செய்தியறிந்து அதிமுக நிர்வாகிகள் பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாகவும் தெரிகிறது. மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.