“தினகரன் மன்னிப்பு கடிதம் குப்பை தொட்டிக்கு போகும்” : கே.பி. முனுசாமி தாக்கு!

 

“தினகரன் மன்னிப்பு கடிதம் குப்பை தொட்டிக்கு போகும்” : கே.பி. முனுசாமி  தாக்கு!

சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதனிடையே உடல்நலக்குறைவால் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவமனையிலிருந்து காரில் சென்ற சசிகலா, தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

“தினகரன் மன்னிப்பு கடிதம் குப்பை தொட்டிக்கு போகும்” : கே.பி. முனுசாமி  தாக்கு!

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, “கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. ஜெயலலிதா மட்டும்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என பொதுக்குழு கூடி சட்டத்திருத்தங்கள் மாற்றப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு விட்டது. இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். அப்படியிருக்கும்போது சசிகலாவை பொதுச்செயலாளர் என்று கூறுவது சுயநலத்திற்காக தான்; அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

“தினகரன் மன்னிப்பு கடிதம் குப்பை தொட்டிக்கு போகும்” : கே.பி. முனுசாமி  தாக்கு!

அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது. அதில் சசிகலா புதுப்பித்து உறுப்பினராக இணையவில்லை . அப்படி கட்சியிலே இல்லாத ஒருவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவரிடம் , அதிமுக – அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “டிடிவி தினகரன் தனிப்பட்ட முறையில் அரசியல் நடத்துவதற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அமமுக. அதை அதிமுகவுடன் இணைக்கும் வாய்ப்புக்கே இடமே இல்லை. ஆனால் டிடிவி தினகரன் , தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடிதம் அளித்தால் அவரை அதிமுகவில் இணைக்க தலைமை பரிசீலனை செய்யும். அப்படி அவர் அதிமுகவில் ஏற்றுக் கொள்ள தகுதி இல்லாதவர் என தலைமை முடிவு செய்தால் அந்த கடிதம் குப்பைத் தொட்டிக்கு சென்று விடும்” என்றார்