‘அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் கூட்டணியில் இருங்கள்’ கே.பி.முனுசாமி அதிரடி!

‘அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் கூட்டணியில் இருங்கள்’ கே.பி.முனுசாமி அதிரடி!

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணியில் இருக்க முடியும் என கே.பி முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பூதாகரமாக உருவெடுத்திருந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை கடந்த 7ம் தேதி முடிவுக்கு வந்தது. பெரும்பான்மையான தொண்டர்களால் ஆதரிக்கப்படும் ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த சர்ச்சையாக அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பேசு பொருளாகியுள்ளது.

‘அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் கூட்டணியில் இருங்கள்’ கே.பி.முனுசாமி அதிரடி!

அண்மையில் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக- பாஜக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது, வரும் தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்திருந்தார். இதனால், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

‘அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் கூட்டணியில் இருங்கள்’ கே.பி.முனுசாமி அதிரடி!

இது குறித்து ஆலோசிக்க நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து நழுவினார். இதன் மூலமாக, ஈபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக தயங்குகிறது என்பது தெளிவாகிறது.

‘அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் கூட்டணியில் இருங்கள்’ கே.பி.முனுசாமி அதிரடி!

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும் என அதிரடியாக பேசியுள்ளார். மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டால் தான் கூரணியில் இருக்க முடியும் என்றும் சசிகலா கட்சிக்குள் வருவதற்கு இடமே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.