தேமுதிகவிற்கு 17 தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்க அதிமுக ஒப்புதல்

 

தேமுதிகவிற்கு 17 தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்க அதிமுக ஒப்புதல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் அதிமுக தலைமை, தற்போது தொகுதி பங்கீட்டில் படு பிஸியாக இருக்கிறது. தன்னுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளை வழங்கியிருக்கிறது. தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. கேட்ட தொகுதிகளை அதிமுக தராததால், தேமுதிக அதிருப்தியில் உள்ளது. முதலில் தங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டது. ஆனால் இதனை அதிமுக மறுத்ததால் பின்னர் 2ஆவது நாளாக நடந்த பேச்சுவார்த்தையில் 25 தொகுதிகளாக தேமுதிக குறைத்துக் கொண்டது. ஆனால் அதற்கும் அதிமுக ஒப்புக்கொள்ளவில்லை.

தேமுதிகவிற்கு 17 தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்க அதிமுக ஒப்புதல்

தொடர்ந்து தேமுதிகவுடன் மூன்றாவது நாளாக அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை பேசியது. தேமுதிக நிர்வாகிகள் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட இழுபறிக்கு பின் தேமுதிகவிற்கு 17 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்க அதிமுக சம்பதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.