‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம்’ – அதிமுக தலைமையின் முக்கிய அறிவிப்பு!

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம்’ – அதிமுக தலைமையின் முக்கிய அறிவிப்பு!

அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம்’ – அதிமுக தலைமையின் முக்கிய அறிவிப்பு!

அதில், 1.1.2021 தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கான பணிகள் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன.

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம்’ – அதிமுக தலைமையின் முக்கிய அறிவிப்பு!

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்ட கழக செயலாளரும், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டம் ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, வார்டு மற்றும் வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தனிக்கவனம் செலுத்தி,

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம்’ – அதிமுக தலைமையின் முக்கிய அறிவிப்பு!
  1. 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத அவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும்;
  2. வெளியூர்களுக்குப் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும்;
  3. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்வதற்கும்;
‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம்’ – அதிமுக தலைமையின் முக்கிய அறிவிப்பு!

தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி பணியை முழுமையாக செய்து முடித்திட வேண்டும். அதேபோல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் அத்துமீறல்கள் இருப்பதாக தெரிய வந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும். கழகத்தின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட கழக செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கழகத்தின் சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து இப்பணியை முடித்து அதன் விபரங்களை தலைமை கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.