‘இரவோடு இரவாக’.. தொகுதி தேர்வை முடித்த அதிமுக!

 

‘இரவோடு இரவாக’.. தொகுதி தேர்வை முடித்த அதிமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொகுதி பங்கீட்டில் படு பிஸியாக இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளிடம் அதிமுக கறார் காட்டியது. திமுகவுக்கு சமமான இடங்களில் போட்டியிட்டே ஆக வேண்டுமென அதிமுக கெடுபிடியாக இருந்ததால், தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

‘இரவோடு இரவாக’.. தொகுதி தேர்வை முடித்த அதிமுக!

அதிமுக கூட்டணியில் அதிக பட்சமாக பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கான வாக்கு வங்கி, தொகுதி நிலவரம் உள்ளிட்ட பல விவரங்களை ஆராய்ந்த பிறகே இத்தனை தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருக்கிறது. அந்த வகையில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் கொடுக்க அதிமுக முன்வந்த நிலையில், அதை ஏற்காத தேமுதிக கூட்டணியை முறித்துக் கொண்டது.

‘இரவோடு இரவாக’.. தொகுதி தேர்வை முடித்த அதிமுக!

இதையடுத்து, நேற்று மாலை திடீர் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் தேமுதிக விலகல், பாஜக மற்றும் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு கொடுக்க வைத்திருந்த 13 இடங்களையும் யாருக்கு கொடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை தான், இன்று அதிகாலை 3 மணி வரை விடிய விடிய நடந்ததாம்.

கூட்டத்தின் முடிவில் பாமக, பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகளை வழங்குவது என அதிமுக முடிவு செய்து விட்டதாம். இன்றைக்கே அதன் விவரங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தொகுதி பங்கீடு முடிந்தவுடன், தனது ஆட்டத்தை ஆரம்பித்த பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாக அதிமுகவின் கை தற்போது ஓங்கியிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.