அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் ஓபிஎஸ்!

 

அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் ஓபிஎஸ்!

அதிமுகவின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திம் கடந்த 1972ஆம் ஆண்டு அக்.17ம் தேதி எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பிரதான கட்சியாக விளங்கும் அதிமுக இன்று, 49 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் ஓபிஎஸ்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியேற்றி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை செயலகத்தில் தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடியேற்றினார்.