திமுகவுக்கு தாவும் அதிமுகவின் மற்றொரு விக்கெட்… ஸ்லீப்பர் செல்லாக மாறிய முன்னாள் அமைச்சர்!

 

திமுகவுக்கு தாவும் அதிமுகவின் மற்றொரு விக்கெட்… ஸ்லீப்பர் செல்லாக மாறிய முன்னாள் அமைச்சர்!

2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகத்தின் பிரதான கட்சிகளாக அதிமுக -திமுக கட்சிகள் கட்சியை திடப்படுத்த பல்வேறு களப்பணிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக கட்சி தாவல்களும் நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு தாவும் அதிமுகவின் மற்றொரு விக்கெட்… ஸ்லீப்பர் செல்லாக மாறிய முன்னாள் அமைச்சர்!

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளருமாக இருந்த லட்சுமணன் இன்று திமுகவில் இணையவுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்த நிலையில் ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு பக்கபலமாக நின்ற எம்பிகளில் இவரும் ஒருவர். இவரின் மாவட்டச் செயலாளர் பதவி கடந்த ஆண்டு பறிக்கப்பட்ட நிலையில் அதிருப்தியில் இருந்தார் லட்சுமணன்.

திமுகவுக்கு தாவும் அதிமுகவின் மற்றொரு விக்கெட்… ஸ்லீப்பர் செல்லாக மாறிய முன்னாள் அமைச்சர்!

இதன் காரணமாக அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுகவில் இணையவுள்ளார். முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரான வி.எஸ்.விஜய் அதிருப்தியில் தி.மு.க-வின் ஸ்லீப்பர் செல்லாக மாறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தது கவனிக்கத்தக்கது.