ஜெயலலிதாவால் 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்…அதிமுக முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு!

 

ஜெயலலிதாவால் 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்…அதிமுக முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு!

எம்ஜிஆர் ,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர் என்று அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்…அதிமுக முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு!

அதிமுக ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மிகவும் கட்டுக்கோப்பான ஒரு கட்சியாக இருந்தது . ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இவர்களெல்லாம் இருக்கிறார்களா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு பலரும் வாய்திறந்து பேச ஆரம்பித்தனர். இதனால் பல சர்ச்சைகளும் வெடித்தது. ஒருகட்டத்தில் சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார்.

அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் – இபிஎஸ் என்ற இருவரின் தலைமையில் கட்சி சென்றது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகி வந்த சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று இரட்டை தலைமை அறிவித்தது . இதனால் கடுப்பான சசிகலா உட்கட்சி வேலைகளில் ஈடுபட்ட நிலையில் ஒருகட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதனால் மீண்டும் அதிமுகவை மீட்பேன் என்ற சபதத்துடன் களத்தில் இறங்கியுள்ளார் சசிகலா.

ஜெயலலிதாவால் 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்…அதிமுக முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு!

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பரமக்குடியில் நடந்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் ,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர் .கிராமங்களில் தேர்தல் நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லும் சொல்கிறார்களா என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். ஜெயலலிதா சிறை சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்; தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் 300க்கும் மேற்பட்டோர் கொலை செய்திருப்பார்கள்” என்றார்.அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் பேச்சால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.