Home அரசியல் "நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்" - நாஞ்சில் முருகேசன்!

“நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்” – நாஞ்சில் முருகேசன்!

சசிகலா சென்னை வந்தபின் வெளியில் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே ரெஸ்ட் எடுத்துவருகிறார். கூடவே அரசியலும் செய்கிறார். இரட்டைத் தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்களை இழுப்பது, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு போன் செய்வது, அணுக்கமாகப் பேசுவது என விரிகிறது அவரின் அரசியல் ஆட்டம்.  இன்று ஒருவரை நேரடியாகவே சந்தித்தும் விட்டார்.

"நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்" - நாஞ்சில் முருகேசன்!
"நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்" - நாஞ்சில் முருகேசன்!

கடந்தாண்டு பாலியல் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் நாகர்கோவில் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். தாய், மகள் மீது பாலியல் குற்றம் புரிந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின் அதிமுகவிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இவர் தான் இன்று சசிகலாவைச் சந்தித்தார். சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தின சுருக்கமாக தவறு செய்தவர்கள், நன்றி கெட்டவர்கள் என அனைவரும் விரைவில் சசிகலா காலில் விழுவார்கள் என்று கூறிச் சென்றார்.

"நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்" - நாஞ்சில் முருகேசன்!

நன்றி கெட்டவர்கள் என அவர் யாரைச் சொல்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியது, அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை கோரி புகார் அளித்தது என இரட்டைத் தலைமை மீதான எக்கச்சக்க கோபத்தின் வெளிப்பாடே அவரின் இந்தப் பேச்சுக்குக் காரணம். சசிகலாவைப் பார்க்க சென்றவரே இவ்வளவு ஃபோர்ஸில் எடப்பாடியை எதிர்க்கிறார் என்றால், சசிகலாவுக்கு எவ்வளவு ஃபோர்ஸ் இருக்கும் என்று அங்கலாய்க்கிறார்கள்.

"நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்" - நாஞ்சில் முருகேசன்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து...
- Advertisment -
TopTamilNews