சசிகலா சேர்ந்தாலும் கட்சி தேராது; அதிமுகவை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

சசிகலா சேர்ந்தாலும் கட்சி தேராது; அதிமுகவை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

உடைந்த பானை போன்றது அதிமுக என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வ.து.நடராஜன் விமர்சித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே அதிமுக பல சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, கட்சியை தலைமை தாங்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இடையே மோதல் வெடித்தது. தேர்தல் நேரத்தில் இந்த மோதல் பூகம்பாக மாறியது. வழக்கம் போல, ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க எடப்பாடி முதல்வர் வேட்பாளராக களம் கண்டு தோல்வியை தழுவினார். பின்னர், மீண்டும் ஓபிஎஸ் இடம் வாக்குவாதம் செய்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்துவிட்டார்.

சசிகலா சேர்ந்தாலும் கட்சி தேராது; அதிமுகவை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

இதனிடையே, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா இறங்கினார். அவரிடம் இருந்து அதிமுக தொண்டர்களை காக்க ஓபிஎஸ் – ஈபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைகள் கட்சியினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால், பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சரான வ.து.நடராஜன் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சசிகலா சேர்ந்தாலும் கட்சி தேராது; அதிமுகவை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், அதிமுக ஒரு உடைந்த பானை. சசிகலா இணைந்தாலும் கட்சி தேராது என கடுமையாக விமர்சித்தார். மேலும், அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்சியை கம்பெனி போல் நடத்கிறார் என்றும் கூறினார்.