பரபரப்பான அரசியல் சூழலில் “ஒரே மேடையில்” ஈபிஎஸ் – ஓபிஎஸ் இன்று பரப்புரை!

பரபரப்பான அரசியல் சூழலில் “ஒரே மேடையில்” ஈபிஎஸ் – ஓபிஎஸ் இன்று பரப்புரை!

அதிமுகவின் தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொது கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் “ஒரே மேடையில்” ஈபிஎஸ் – ஓபிஎஸ் இன்று பரப்புரை!

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று அதிமுக சார்பில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் துவக்கி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் “ஒரே மேடையில்” ஈபிஎஸ் – ஓபிஎஸ் இன்று பரப்புரை!

காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை அதிமுக தலைமை அழைக்கவில்லை.

பரபரப்பான அரசியல் சூழலில் “ஒரே மேடையில்” ஈபிஎஸ் – ஓபிஎஸ் இன்று பரப்புரை!

40 இடங்களுக்கு மேல் தருவோருடன் மட்டுமே கூட்டணி என தேமுதிக திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக அறிவித்தலும் முதல்வர் வேட்பாளர், தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் பிரச்சினை சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.