‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின்’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 

‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின்’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய திமுகவை எதிர்த்து அதிமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின்’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தனது வீட்டின் முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் நேரத்தில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்துடைப்புக்காக ஒரு கமிஷன் அமைத்து விட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் கவனத்தை திசை திருப்பவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு வருகிறார்கள்; இது கண்டிக்கத்தக்கது.

‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின்’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கல்வி கடன் ரத்து , குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது; ஆனால் திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்டு போயுள்ளது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கொரோனாவை தடுக்க திமுக எதுவும் புதிதாக செய்யவில்லை . அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன செய்யபட்டதோ அதை இவர்கள் பின்பற்றி வருகிறார்கள், அவ்வளவுதான்; சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் ” என்றார்.