அதிமுகவுடன் தொகுதி பங்கீடு : கூட்டாக ஆலோசனை நடத்தும் பாஜக!

 

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு : கூட்டாக ஆலோசனை நடத்தும் பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிரடியாக களமிறங்கியிருக்கிறது அதிமுக. சசிகலா வருகை, பாஜகவின் நெருக்கடி என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் அதிமுக, எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் வெளிபாடு தான் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, விவசாய கடன் தள்ளுபடி என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதை பொருட்படுத்தாது, அதிமுக அதிரடியாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு : கூட்டாக ஆலோசனை நடத்தும் பாஜக!

வரும் 12ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகிறது. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடே நிறைவடையவில்லை. பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகளை ஒதுக்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தேசிய கட்சியான பாஜகவுக்கு இதுவரையில் தொகுதிகள் உறுதி செய்யப்படவில்லை. அதிமுகவின் முக்கியமான 40 தொகுதிகளை கேட்ட பாஜகவுக்கு, 20 தொகுதிகளை மட்டுமே கொடுக்க அதிமுக முன்வந்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு : கூட்டாக ஆலோசனை நடத்தும் பாஜக!

இந்த நிலையில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அதில் கிஷன் ரெட்டி, சி.டி ரவி, எல்.முருகன் உள்ளிட்டோர் கூட்டாக பங்கேற்றுள்ளனர்.