பாஜகவுக்கு எத்தனை சீட்? : அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை!

 

பாஜகவுக்கு எத்தனை சீட்? : அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் களம் காணுவதால் தொகுதி பங்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. 10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டால் மட்டுமே இது சாத்தியமானது.

பாஜகவுக்கு எத்தனை சீட்? : அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை!

பாமகவுக்கு வழங்கியதை விட அதிகமான தொகுதிகள் வேண்டுமென தேமுதிக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், தேமுதிகவுக்கு 12 தொகுதிகளை கொடுக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறதாம். இது அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பாஜகவுக்கும் அதிமுகவின் முக்கிய தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகின.

பாஜகவுக்கு எத்தனை சீட்? : அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்த நிலையில், தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய அதிமுகவுடன் பாஜக 4ம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் பங்கேற்றுள்ளனர். பாஜக தரப்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில், அதிமுக பாஜகவுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது என்பது தெரிய வரும்.