ராஜபாளையம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக.. கலங்கிய கௌதமி!

 

ராஜபாளையம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக.. கலங்கிய கௌதமி!

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியலை நேற்று அதிமுக தலைமை வெளியிட்டது. பாஜகவுக்கு 20, பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாமக நேற்றே 19 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து விட்டது. பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

ராஜபாளையம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக.. கலங்கிய கௌதமி!

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ராஜபாளையம் இல்லை. அந்த தொகுதியில் பாஜக சார்பாக நடிகை கௌதமி போட்டியிடுவார் என்றும் கடந்த 3 வாரங்களாக அதற்கான பணிகளை அவர் மும்முரமாக செய்து வருகிறார் என்றும் அண்மையில் தகவல்கள் கசிந்தன.

ராஜபாளையம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக.. கலங்கிய கௌதமி!

கௌதமியுடன் சேர்ந்து பாஜக உறுப்பினர்கள் பலரும் அங்கு தேர்தல் பணிகளை செய்து வந்தார்களாம். இந்த நிலையில், ராஜபாளையம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாதது கௌதமிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட உள்ளதால் பாஜகவினர் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

5 மாதங்களாக தொடர்ந்து உழைத்தது வீணாகி விட்டதே என்ற சோகத்தில் இருக்கும் கௌதமி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் ட்வீட் ஒன்று போட்டார். அதில், உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன். என்றும் அன்புடன் உங்கள் கௌதமி என உருக்கமாக பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டில் அமித்ஷா, மோடி உள்ளிட்டோரையும் டேக் செய்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.