‘2021 சட்டமன்றத் தேர்தல்’ முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்; அதிமுகவினர் கொண்டாட்டம்!

 

‘2021 சட்டமன்றத் தேர்தல்’ முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்; அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதால், அதிமுகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப்போவது யார் என்ற சர்ச்சை அண்மையில் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த பிரச்னைக்கு அதிமுகவின் மூத்த பிரமுகர்களாலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இருப்பினும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த சர்ச்சைக்கு முடிவு காட்டுவார்கள் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

‘2021 சட்டமன்றத் தேர்தல்’ முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்; அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதன் படி, தற்போது அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி போட்டியிடுவார் என சென்னை ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். மேலும், அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம், முதல்வராக போட்டியிட வேண்டும் என்ற ஈபிஎஸ் கோரிக்கையும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையும் நிறைவேறியுள்ளது.

‘2021 சட்டமன்றத் தேர்தல்’ முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்; அதிமுகவினர் கொண்டாட்டம்!

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து, துணை முதல்வர் ஓபிஎஸ் அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தற்போது அதிமுகவினர் சென்னை ராயப்பேட்டையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.