தேனி அருகே தேர்தல் மோதலில் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை!

 

தேனி அருகே தேர்தல் மோதலில் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை!

தேனி

தேனி அருகே தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த அதிமுக பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பள்ளிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மயில்முருகன் (45). அதிமுக பிரமுகரான இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6ஆம் தேதி வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த மயில்முருகன், வாக்குச்சாவடி மையத்தில் பூத் ஏஜெண்டாக செயல்பட்டார்.

அப்போது, வாக்குச்சாவடிக்கு கட்சி அடையாளத்துடன் வந்த நபரால் திமுகவினர் – அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அன்றிரவு அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், சமாதானம் செய்ய முயன்ற மயில்முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தேனி அருகே தேர்தல் மோதலில் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை!

பின்னர், அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மயில்முருகன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மயில்முருகனை கொன்றவர்கள் மீது நடடிவக்கை எடுக்கக்கோரி நேற்று சின்னமனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டததில் ஈடுபட்டனர்.

கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில், பின்னர் கலைந்து சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.