அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்த வேலைய பாருங்க…

 

அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்த வேலைய பாருங்க…

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப் பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் என அறிவிக்கப்பட்டது. இவ்விதியின்படி பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என எதையும் வாக்காளார்களுக்குக் கொடுக்கக் கூடாது. இதனிடையே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் விளம்பர பதாகைகள், அரசியல் தலைவர்களின் படங்கள் ஆகியவற்றை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்த வேலைய பாருங்க…

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்த நிலையில் விராலிமலை தொகுதிக்குட்பட்ட களமாவூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விராலிமலை மட்டுமின்றி ஊட்டி போன்ற இடங்களிலும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.