பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை? அதிமுக- பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

 

பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை? அதிமுக- பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஸ்கெட்ச் போட்டிருக்கும் அதிமுக, 170 தொகுதிகளில் தனது வேட்பாளரையே களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அதிமுக பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது.

பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை? அதிமுக- பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தேமுதிகவுக்கு 17 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்துள்ளது. அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 20 தொகுதிகளை மட்டுமே வழங்கியுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் அதிமுக தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் அதிமுக – பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.