• April
    05
    Sunday

Main Area

Main



எம்.பி பதவிக்கு கோதாவில் குதித்த அ.தி.மு.க பெருந்தலைகள்... நெருக்கடியில் ஒபிஎஸ், ஈபிஎஸ்!

Eps and Ops
Eps and Ops

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வருவதையொட்டி அ.தி.மு.க-வுக்குள் இப்போதே முட்டல் மோதல் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க-வின் சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன், தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனால் புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் நடைபெறும். இதற்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும். இந்த இடங்களைப் பெற அ.தி.மு.க-வில் இப்போதே போட்டிகள் தொடங்கிவிட்டன.
தற்போதைய சூழலில் அ.தி.மு.க இடங்களிலும், தி.மு.க இரண்டு இடங்களிலும் வெற்றி பெற முடியும். மீதமுள்ள ஒரு இடத்தில் தி.மு.க வெற்றிபெற அதற்கு இரண்டு வோட்டு தேவை. கூட்டணிக் கட்சி ஆதரவுடன் வெற்றிபெற்றுவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது.
ஆனால், அ.தி.மு.க-வில் மூன்று இடங்கள் யாருக்கு என்பதில் குடுமிப்பிடி சண்டை தொடங்கிவிட்டது. விஜிலா தற்போது அ.தி.மு.க எம்.பி-க்கள் குழுவின் கொறடாவாக உள்ளார். இதனால் தனக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். மூன்று இடங்களை எப்படி பிரிப்பது என்பதே ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு இடையே பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போதும் இந்த பிரச்னை எழுந்தது. ஒரு தொகுதி கூட்டணிக்கு என்று முடிவானதால், ஓ.பி.எஸ் தரப்புக்கு ஒன்று, இ.பி.எஸ் தரப்புக்கு ஒன்று, கூட்டணிக்கு ஒன்று என்று சுமூகமாக தேர்தல் முடிந்தது.

mp-vijila
mp-vijila

இந்த தேர்தலில் கூட்டணிக்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. நான்கு உறுப்பினர்களுக்கு பதில் மூன்று உறுப்பினர்களையே தேர்வு செய்ய முடியும். இதனால் அ.திமு.க மாநிலங்களவை உறுப்பினர்களின் பலம் குறைகிறது. எனவே எப்படி பிரிப்பது என்று மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த முறையே தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் முகமது ஜானை தேர்வு செய்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், இந்த முறை முகமது ஜானுக்கு ஒரு இடம் உறுதி என்கின்றனர் கட்சியினர்.
கே.பி.முனுசாமி, மூத்த அமைச்சர்கள் நான்கு பேர் என்று பலரும் எம்.பி சீட்டுக்காக சண்டையிட்டு வருகின்றனர். இவர்களுக்கு நடுவே கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒன்றை ஒதுக்க பா.ஜ.க மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் நன்கு பேசத் தெரிந்தவர்களை அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். இத்தனைபேர் எதிர்பார்ப்பை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் விழித்துவருகின்றனர்.

kp-munusamy
kp-munusamy

தி.மு.க தரப்பிலும் சில கோரிக்கைகள் எழுந்துள்ளன. கடந்த முறை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், இந்த முறை இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மற்றபடி பெரிய அளவில் நெருக்கடிகள் எதுவும் இல்லை. ஸ்டாலின் விரும்புகிறவர்களுக்கு பதவி வழங்கப்படும் என்றே தி.மு.க மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.