அக்.6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வர தலைமை உத்தரவு!

 

அக்.6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வர தலைமை உத்தரவு!

முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 6ம் தேதி சென்னை வர வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தற்போது அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய பெருங்குழப்பம் நீடிக்கிறது. அண்மையில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க செயற்குழு கூட்டம் கூடியது. அதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாரும் இடம்பெற்றிருந்தும் வேட்பாளர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்ததாக தகவல் வெளியானது.

அக்.6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வர தலைமை உத்தரவு!

அதாவது ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்டவர் நான் தான் என ஓபிஎஸ் கூற, இரண்டு பேருமே சசிகலாவால் தான் முதல்வராக்கப்பட்டோம் என ஈபிஎஸ் பதிலுக்கு பதில் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் மூண்டதால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணாமலேயே செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது. மேலும், வரும் 7ம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சேர்ந்தே முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பார்கள் என கே.பி முனுசாமி அறிவித்தார்.

அக்.6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வர தலைமை உத்தரவு!

இந்த நிலையில், வரும் 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படவிருப்பதால், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.