தேர்தல் முடிவுக்கு முன்னரே நன்றி போஸ்டர்கள்… அரசியல் கட்சிகள் அதகளம்!

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மேற்கு வங்கம் தேர்தல் 8 கட்டமாக நடந்ததால் கடந்த 29ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. அன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் இரவு 7 மணிக்கு அனைத்து செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

தேர்தல் முடிவுக்கு முன்னரே நன்றி போஸ்டர்கள்… அரசியல் கட்சிகள் அதகளம்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் திமுக தான் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது. இதனால், அதிமுக வெற்றி வாகையை சூடுகிறதா? திமுக வெற்றி வாகையை சூடுகிறதா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் நன்றி தெரிவித்து போஸ்டர்கள் அடிக்க ஆரம்பித்து விட்டன. திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதே போல, திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றதாக திமுக நிர்வாகிகள் போஸ்டர் அடித்து அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் அதகளத்தை ஆரம்பித்துவிட்டது நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.