அதிமுக – திமுக பிரமுகர்களிடையே வெடிக்கும் மோதல்!

 

அதிமுக – திமுக பிரமுகர்களிடையே வெடிக்கும் மோதல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் படி, கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எல்லா பகுதிகளிலும், அந்தந்த இடத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார்கள். இது தான், திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.

அதிமுக – திமுக பிரமுகர்களிடையே வெடிக்கும் மோதல்!

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், நாங்கள் தான் பணத்தை கொடுப்போம் என விடாப்பிடியாக இருக்கிறார்கள் திமுகவினர். ஆனால், அதிமுகவினரோ நாங்கள் ஜெயித்த இடங்களில் நாங்கள் தான் கொடுப்போமென மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பல இடங்களில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே சண்டை மூண்டுள்ளது. நேற்று திருவள்ளூர் அருகே அதிமுகவை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக – திமுக பிரமுகர்களிடையே வெடிக்கும் மோதல்!

இதைத்தொடர்ந்து, நேற்று வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை புல்லூர் பகுதி நியாய விலை கடையில் நிவாரண நிதி வழங்க அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திமுகவினர் நாங்கள்தான் பணம் கொடுப்போம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதேபோல வாணியம்பாடியில் இருக்கும் மற்றொரு நியாய விலை கடையில் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் பணத்தை விநியோகம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு வந்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், அவர் எப்படி கொடுக்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ வைரலானது.

அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்ளும் இந்த விவகாரத்தில், கட்சித் தலைமைகள் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.