`ஆன்லைனில் எம்பிஏ, எம்சிஏ , பிடெக் மாணவர் சேர்க்கை!’- அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

 

`ஆன்லைனில் எம்பிஏ, எம்சிஏ , பிடெக் மாணவர் சேர்க்கை!’- அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

பிஇ, பிடெக் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

`ஆன்லைனில் எம்பிஏ, எம்சிஏ , பிடெக் மாணவர் சேர்க்கை!’- அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும். பிஇ, பிடெக் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் ஆன்லைனிலேயே நடைபெறும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.

நடப்பாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் இதுவரை 55,995 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும். இணையதள பதிவு முடிவு பெற்றவுடன் ரேண்டம் எண் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேண்டம் எண் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். TNEA இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடுவதுடன் தகவலும் அனுப்பப்படும். கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.